Headlines

மின் விசிறியில் தூக்கிட்டு கணவன் – மனைவி உயிரிழப்பு

மின் விசிறியில் தூக்கிட்டு கணவன் - மனைவி உயிரிழப்பு

ஓசூர் பஸ்தி பாரதியார் நகர் அருகே திருமலை நகர் பகுதியில் வசித்து வந்தவர் உலகநாதன் (50) இவரது மனைவி ராணி (44) இவர்களுக்கு கவிதா (28) என்ற மகளும் சுரேஷ் (27) மற்றும் தினேஷ் (26) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
இதில் கவிதாவுக்கும் சுரேஷுக்கும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
தினேஷ் சிறிய அளவிலான தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில்
நேற்று காலை உலகநாதன் தனது வீட்டில் வளர்க்கும் நாயை வெளியே அழைத்துச் சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அதன் பின் கணவன் மனைவி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.
அந்த பகுதியில் வசிக்கும் அவரது மகள் கவிதாவை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

கவிதா வீட்டுக்கு சென்றபோது உலகநாதனும் ராணியும் மின்விசிறியும் தூக்கு மாட்டிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர்.

அதனைப் பார்த்த கவிதா அலறியதை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு வந்து பார்த்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் ஓசூர் அட்கோ போலீசார் கணவன் மனைவி இருவரது பிரேதங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த உலகநாதன் மீது ஓசூர் அட்கோ மத்திகிரி மற்றும் சிப்காட் ஆகிய காவல் நிலையங்களில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் காப்பர் மின்சார ஒயர்களை திருடுவது சம்பந்தமாக 6 திருட்டு வழக்குகள் உள்ளதாகவும், இந்த வழக்கில் அவர் கடந்த 2025 ஆம் ஆண்டு 8 வது மாதம் ஓசூர் அட்கோ போலீசார் கைது செய்துள்ளனர் அதனைத் தொடர்ந்து அவர் சிறை சென்று பெயிலில் வந்துள்ளதாகவும், தற்போது மேலும் ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் விசாரணைக்காக நேற்று முன்தினம் அவரை அட்கோ காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று உலகநாதனும் அவரது மனைவி ராணியும் வீட்டில் தற்கொலை செய்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *