செப்.27 அன்று பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய ஊரக வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்.
ரிசர்வ் வங்கி அனுமதியுடன் வங்கிக் கிளைகள், அலுவலகங்கள், ஏடிஎம் இணைப்பு கிளைகள் மற்றும் பணக் காப்பகங்களும் முழுமையாக செயல்படும்.
செப். 28 முதல் 30 வரை 3 நாள் வங்கி வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில், செப். 27 வங்கி சேவை தொடரும்.
செப். 26, 27 வார விடுமுறைகளுடன் வேலைநிறுத்தம் இணைவதால் ஏற்படக்கூடிய தொடர்ச்சியான 5 நாள் வங்கி சேவை பாதிப்பைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5 நாள் வேலை வாரத்தை அமல்படுத்த வேண்டும் என்பது வங்கி தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
