Headlines

சாலையோரத்தில் கொட்டப்பட்ட மலையளவு கழிவுகள் : நோய் தொற்று அபாயம்

சாலையோரத்தில் கொட்டப்பட்ட மலையளவு கழிவுகள் : நோய் தொற்று அபாயம்

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட 32 வார்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள், மருத்துவமனைகளில் இருந்து எடுத்து வரப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி
கழிவுகள் டிராக்டர்கள் மூலமாக எடுத்து வரப்பட்டு கிருஷ்ணகிரி குப்பம் சாலையில் கொட்டப்பட்டு வருகிறது.

கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் குப்பைகளை கொட்டி வருவதால் குப்பைகள் மலைபோல தேங்கி உள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் இறச்சி கழிவுகள் மருத்துவ கழிவுகளை மூட்டை, முட்டை யாககட்டி சாலை ஒரங்களில் கொட்டி விட்டு செல்வதால் பெரும் தூர் நாற்றம் வீசுகிறது.

இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும், சாலை மார்க்கமாக நடந்து செல்பவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்,

மேலும் தொற்றுநோய் மற்றும் டெங்கு காய்ச்சலும், ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு இருப்பதால் அப்பகுதிகளில் குடியிருந்து வரும மக்களுடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து பேசிய அப்பகுதியை சேர்ந்த ஆனந்த் பூபால், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் மருத்துவ கழிவுகள் இறச்சிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை சாலையோரம் கொட்டி விட்டு செல்வதினால் சாலையில் செல்ல முடியாத அளவுக்கு தூர் நாற்றம் , ஏற்பட்டு உள்ளது.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் குப்பைகளை கொட்டப்பட்டு வருவதால் நிலத்தடி தண்ணீரும் மாசுபட்டு விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. தற்போது டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களும் வேகமாக பரவி வருகிறது.

ஆகையால் மலைப்போல் தேங்கி உள்ள இந்த குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்
என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *