தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரை ஆதரித்து அக்.4 ம் தேதி முதல்வர் விஜய் ரோடு ஷோ பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரத்தின் இறுதி நாளான நான்காம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாராபுரம் ருத்ராவதி துவங்கி குண்டடம் தாராபுரம், மூலனூர், தாசர் பட்டி வரை என ரோடு ஷோ வாகன பரப்புரை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக அட்டவணை வெளியாகி உள்ளது.
