Headlines

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : குளித்தலை நகராட்சியில் சிக்கிய பணம்,ஜிபே கணக்கு

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : குளித்தலை நகராட்சியில் சிக்கிய பணம்,ஜிபே கணக்கு

குளித்தலை நகராட்சியில்
கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 7 மணி நேரம் நடத்திய தீவிர சோதனையில் நகராட்சி மேலாளரின் ஜி.பே மூலம் பெறப்பட்ட கணக்கில் வராத ரூ 4 லட்சத்து 2000 ரூபாய் சிக்கியது.

கரூர் மாவட்டம்,குளித்தலை நகராட்சி
அலுவலகம் குளித்தலை பெரியபாலம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி பி.கே.ஜான் தலைமையில்,இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுவினர் காரில் வந்தனர்.

அவர்கள் திடீரென அலுவலகத்திற்கு புகுந்து அங்கு பணியில் இருந்தவர்களை வெளியில் செல்ல விடாமல் அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து
விசாரணை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை இரவு சுமார் 10 மணி வரை நடைபெற்றது. இந்த ஆய்வின்போது
நகராட்சி ஆணையர் சுதர்சன்,
நகராட்சி பொறியாளர் தியாகராஜன்,
சுகாதார ஆய்வாளர் சரவணன்,
மேலாளர் சிவலிங்கம்,
மற்றும் அலுவலர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களது இருக்கையில் உள்ள அறைகளையும் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.51 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மேலும் நகராட்சி மேலாளர் சிவலிங்கம் என்பவருடைய ஜிபே யில் இருந்த ரூபாய் 4 லட்சத்து 2000 குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும்,இது குறித்து முழு விளக்கமும் DVAC தலைமை உயர் அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்று கூறி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *