Headlines

திருப்பதி மலையில் சிறுத்தை நடமாட்டம் : தேவஸ்தானம் அறிவுறுத்தல்

திருப்பதி மலையில் சிறுத்தை நடமாட்டம் : தேவஸ்தானம் அறிவுறுத்தல்

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் நடைபாதையில் உள்ள
2765 படிக்கற்களுக்கு அருகே உள்ள மரத்தில் சிறுத்தை ஒய்யாரமாக அமர்ந்திருந்தது.
இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் உடனடியாக வனத்துறையினரை வரவழைத்து சிறுத்தையை விரட்டும் பணி நடைபெற்றது. நடைபாதை அருகே சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் நடந்து வரும் பக்தர்கள் குழு குழுவாக செல்ல தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *