திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக நகர காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன.இதையடுத்து, தனிப்படை அமைத்த போலீசார் வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், வாணியம்பாடி முனீஸ்வரன் கோயில் பகுதியில் நகர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் தும்பேரி கிராமத்தை சேர்ந்த மாயன் என்பவரின் மகன் ஐயப்பன்(30) என்பது தெரியவந்தது.மேலும்,
அவர் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடியதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
