Headlines

தாராபுரம்: போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்

தாராபுரம்: போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா மூலனூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கருப்பன் வலசு புதுப்பை கருப்பான வலசு,நஞ்சை தலையூர் புஞ்சை தலையூர் கந்தசாமி பாளையம் எல்லப்பாளையம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராமங்களில் விசில் சின்னத்திற்கு
போலீசார் பாதுகாப்புடன் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

ஐந்திற்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்களிலும், வாடகை டெம்போ ட்ராவலர் வாகனத்திலும் வேட்பாளருடன் பாதுகாப்பு பணிக்காக
50க்கும் மேற்பட்ட
போலீசார் உடன் சென்றனர்.

நேற்று முன்தினம் குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்பலபட்டி நந்தவனம் பாளையம் கிராமங்களில் பிரச்சாரத்தின் போது தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்திய பாமாவிற்கு பிஏபி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து வேட்பாளர் சத்தியபாமா புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் நேற்று புஞ்சை தலையூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் சத்தியபாமா பேசுகையில்,
மக்கள் சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என ஆர்வமாக பார்க்கின்றனர்,
100 நாள் ஒடக் கூடிய படத்தைக் கூட மக்கள் அவ்வளவு ஆர்வமாக பார்ப்பதில்லை , ஆனால்
சட்ட மன்ற கூட்டத்தை மக்கள் ஆர்வமுடன் பார்க்கின்றனர்.
இந்த சாதனை
ரெக்கர்ட் பிரேக் தலைவரால் மட்டுமே முடியும் , ஆளும் கட்சியாக இருந்தால் மட்டுமே உடனுக்குடன் தொகுதியின் தேவைகளை தீர்க்க முடியும்.
என கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *