Headlines

“எங்களை விட்டுடுங்க.” கதறிய சிறுமி : பலாத்கார முகமூடி கும்பலின் கொடூர செயல்

"எங்களை விட்டுடுங்க." கதறிய சிறுமி : பலாத்கார முகமூடி கும்பலின் கொடூர செயல்

பீகாரில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, இரவு நேரத்தில் நடந்து சென்ற சிறுவன் மற்றும் சிறுமியைச் சூழ்ந்து கொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ, ஜமுய் (Jamui) மாவட்டத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வீடியோவில், இருவரையும் பல ஆண்கள் சூழ்ந்து கொண்டு அச்சுறுத்துவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. ஒரு கட்டத்தில், அக்கும்பலைச் சேர்ந்த ஒருவன் அந்தச் சிறுமியைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயல்வதையும், அச்சிறுமி அதிலிருந்து தப்பிக்கப் போராடுவதையும் காண முடிகிறது.

பின்னர், அந்த இளம் ஜோடி அவர்களிடம் கெஞ்சி மன்றாடி அங்கிருந்து தப்பிச் செல்கிறது
மாலை நேரப் பயிற்சிகளுக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த அராஜகக் கும்பல் இருவரையும் வழிமறித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோவை குற்ற கும்பலில் ஒருவர் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அரசியல் கட்சியினர்,சமூக வலைத்தளப் பயனர்கள், பலரும் பீகார் காவல்துறையைக் குறிப்பிட்டு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள ஜமுய் மாவட்டக் காவல்துறை, பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் சிறுமியைக் கண்டறிந்து அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது.

செப்டம்பர் 19 அன்று நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை
காவல் துறையினர் அடையாளம் கண்டு
போஸ்கோ வழக்கில் கைது செய்தனர். இந்த குற்ற சம்பவத்தில் 10 பேர் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *