ராஜபாளையம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் ரக்காச்சி அம்மன் கோவில் நீர் வீழ்ச்சி உள்ளது. கடும் வறட்சியின் காரணமாக நீர்வீழ்ச்சியில் கடந்த பல மாதங்களாக தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்த கனமழையின் காரணமாக ராக்காச்சி அம்மன் கோவில் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ராக்காச்சி அம்மன் கோவில் நீர்வீழ்ச்சி பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
