திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிஅடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(73).இவர் காதர்பேட்டை பகுதி சி.என்.ஏ சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக அரிசி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடைக்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், அரிசி மூட்டைகள் வாங்குவது போல் நடித்து கண்ணன் அணிந்திருந்த 4 கிராம் தங்க மோதிரத்தை நைசாக கழற்றி எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
சம்பவம் குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில், வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
வாணியம்பாடியில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான காதர்பேட்டையில் முதியவரிடம் தங்க மோதிரம் பறித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
