திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.
திருவண்ணாமலை வெளிவட்டசாவையில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ
கல்லூரி எதிரே சாலையோரத்தில் செயல்பட்டு வந்த உணவகங்கள் உள்ளிட்ட கடைகளை அகற்ற காவல்துறையுடன் இணைந்து நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தினர்.
அப்போது சாலையோர வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உதவியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கடைகளை அமைக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.
