Headlines

பிரதமர் மோடி பிறந்தநாள் : 3001 தீபங்களில் மோடி உருவம் – பாஜகவினர் கொண்டாட்டம்

பிரதமர் மோடி பிறந்தநாள் : 3001 தீபங்களில் மோடி உருவம் - பாஜகவினர் கொண்டாட்டம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளையொட்டி, கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கவுண்டம்பாளையம் பகுதியில் பல்வேறு விமரிசையான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கவுண்டம்பாளையத்தில் உள்ள ‘ஸ்ரீ சுஹிதா ஹாலில்’ நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் , பாரத தேசத்தின் வளர்ச்சி மற்றும் பிரதமரின் நீண்ட ஆயுளை வேண்டி 3,001 ‘ஆசீர்வாத தீபங்கள்’ ஏற்றப்பட்டன. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் பிரம்மாண்ட உருவ வடிவில் தரையில் தீபங்கள் வரிசையாக அடுக்கப்பட்டு சுடர்விடச் செய்யப்பட்டது பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

தொடர்ந்து, பிரதமரின் 25 ஆண்டு கால பொதுச்சேவையைப் போற்றும் வகையில் ‘வண்ணமயமான தேசம்’ என்ற தலைப்பில் வண்ணக்கோல நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் அணியினர் ஆர்வத்துடன் பங்கேற்று, நாட்டின் நவீன அடையாளமான ‘வந்தே பாரத் ரயில்’ மற்றும் தேசியக் கொடியின் வண்ணங்களை உள்ளடக்கிய பிரம்மாண்ட ரங்கோலிகளைத் தத்ரூபமாக வரைந்து அசத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு கோவை மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஆர்.நந்தகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்ராஜ், சேலஞ்சர் துரை, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மேலும், மாநில செயற்குழு உறுப்பினர் விஜயா ரவி, மாநில இளைஞரணி துணைத் தலைவர் கிருஷ்ணபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை மாவட்ட பொதுச் செயலாளர்கள் மதன் மோகன், சுதாகர், ப்ரீத்தி லட்சுமி மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் சபரி கிரிஸ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இதில் மாவட்ட செயலாளர் சரஸ்வதி, மாவட்ட மகளிர் அணி தலைவர் ஜெயஶ்ரீ குன்னத் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மண்டல் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக, தேச நலனுக்காகவும், ஒற்றுமைக்காகவும் பாடுபடுவோம் என்று அனைவரும் திரண்டு நெகிழ்ச்சியுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *