Headlines

வேதிப்பொருள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து

வேதிப்பொருள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து

சிவகங்கை மாவட்டம் ஏனாதி அருகே வேதிப்பொருள் ஏற்றி வந்த லாரி சாலை தடுப்பில் மோதியதில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

காரைக்காலில் இருந்து பொட்டாசியம் குளோரைடு ஏற்றி வந்த லாரி சிவகங்கை – மதுரை சாலையில் உள்ள ஏனாதி பகுதி வளைவில் சென்ற போது சென்டர் மீடியன் தடுப்புச் சுவற்றில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதில் லாரியில் இருந்த டீசல் அனைத்தும் சாலையில் கொட்டியது. தகவல் அறிந்து சிவகங்கை தீயணைப்புதுறை உதவி மாவட்ட அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்புத் துறையினர் நுரை கரைசலை அடித்து பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியினை மேற்கொண்டனர்.
இந்த விபத்தால் சிவகங்கை – மதுரை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *