இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட 9 பொதுத்துறை வங்கிகள் 3 பொதுத்துறை வங்கி குழுமங்களுடன் இணைக்கப்பட்டதாக பரப்பபட்ட ஆவணம் போலியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியன் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா,சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை எஸ்.பி.ஐ வங்கியுடனும்,யூனியன் பேங்க் ஆப் இந்தியா,பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் & சிந்த் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், கனரா வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடாவுடனும் இணைக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சக அறிவிப்பு என்ற ஆவணம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
இது போலியான அறிக்கை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிஐபி என்ற மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் இதுபோன்ற எந்த அறிவிப்பும் மத்திய நிதி அமைச்சகத்தால் வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளது.
