Headlines

மாட்டு கொட்கைக்குள் புகுந்த காட்டு யானை : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மாட்டு கொட்கைக்குள் புகுந்த காட்டு யானை : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை தடாகம் பகுதியில் காட்டு யானை ஒன்று மாடுகளை தாக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், மாங்கரை, சோமையனூர், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது.

இந்நிலையில் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை தடாகம் உச்சயனூர் பகுதிகளில் சுற்றி திரிந்துள்ளது. அப்போது எஸ் எம் நகர் பகுதியில் ஒரு வீட்டின் மாட்டு கொட்டகையில் இருந்த மாட்டு தீவனங்களை தின்றுள்ளது.

பின்னர் அங்கிருந்து சென்ற யானையை பார்த்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகள் கத்தியதால் யானை ஒரு மாட்டை தாக்க முயன்றது. அதிர்ஷ்டவசமாக அந்த மாடு தாவி குதித்து பின் சென்றதால் யானை அங்கிருந்து நகர்ந்து சென்றது.

தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவு உள்ளதால் வனத்துறை இரவு நேர ரோந்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *