Headlines

சபரிமலை கோயில் நடை திறப்பு

சபரிமலை கோயில் நடை திறப்பு

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

வரும் 21-ம் தேதி வரை புரட்டாசி மாத பூஜையை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடத்துகிறார். இந்த நாட்களில் படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. புரட்டாசி மாத பூஜைக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21 ஆம் தேதி இரவு 10 மணிக்கு ‘ஹரிவராசனம்’ பாடி நடை அடைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *