Headlines

முட்டைகளை ஆட்டைய போட்ட சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்

முட்டைகளை ஆட்டைய போட்ட சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே கோச்சத்திரம் பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த செவ்வாயன்று பள்ளி மாணவர்கள் புத்தகக் கண்காட்சிக்காக வெளியே சென்றிருந்தனர். அப்போது மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 230 சத்துணவு முட்டைகளை, பள்ளியின் சத்துணவுப் பொறுப்பாளர் விஜயா என்பவர் பையில் எடுத்துச் சென்று வெளியே விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவு முட்டைகளை எடுத்துச் சென்ற சம்பவம் குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து, சத்துணவு முட்டைகளை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் சத்துணவுப் பொறுப்பாளர் விஜயாவை பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவுப் பொருட்களை முறைகேடாக எடுத்துச் சென்றதாக கூறப்படும் சம்பவத்தில் ஊழியர் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, பள்ளி மற்றும் சத்துணவுத் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *