Headlines

முதலமைச்சர் ஹிட்லர், அமைச்சர்கள் கோயபல்ஸ்கள் :அன்பில் மகேஸ் பொய்யாமொழி

முதலமைச்சர் ஹிட்லர், அமைச்சர்கள் கோயபல்ஸ்கள் :அன்பில் மகேஸ் பொய்யாமொழி

முதலமைச்சர் ஹிட்லராகவும், அவருடைய அமைச்சர்கள் கோயபல்ஸாகவும் (Goebbels) செயல்பட்டு வருகிறார்கள். இதனை நாங்கள் சாடுவதால் எங்கள் மீது திட்டமிட்டு இத்தகைய சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் சோதனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,
ஒரு உதவி ஆணையர் மற்றும் ஒரு ஆய்வாளர் உள்ளிட்ட சுமார் 20 போலீஸார் எனது வீட்டில் சோதனை நடத்தினார்கள். என்னிடம் எவ்வித விசாரணையும் நடத்தவில்லை.

சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். அதனை அவர்களே பாராட்டினார்கள். அதிகாரத்தால் மிரட்டிப் பார்த்து எங்களை பணிய வைக்க முயற்சிக்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது. எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.

நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தேர்வு முடிவுகள், மாணவர்களுடைய தேர்ச்சி விகிதத்தில் கிடைத்த சாதனைகள் குறித்த விவரங்களை வீட்டில் வைத்திருந்தேன். அந்த ஆவணங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு என்னிடம் கையெழுத்து பெற்றுச் சென்றார்கள். மேலும், வரும் 18-ஆம் தேதி அன்று சென்னையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்கள்.

விசாரணைக்கு முறையாக ஆஜராவேன். விசாரணைக்குப் பிறகு நேரடியாக தாராபுரம் சென்று, திமுக தலைமை எனக்குக் கொடுத்துள்ள இடைத்தேர்தல் பணியில் ஈடுபடுவேன். எங்களை யாரும் முடக்கிவிட முடியாது.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகிய நானும், முன்னாள் அமைச்சர் கே. என்.நேருவும் தொடர்ச்சியாகத் தற்போதைய தவெக அரசின் நடவடிக்கைகளுக்குப் பதில் அளித்து வருகிறோம்.

முதலமைச்சர் ஹிட்லராகவும், அவருடைய அமைச்சர்கள் கோயபல்ஸாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இதனை நாங்கள் சாடுவதால் எங்கள் மீது திட்டமிட்டு இத்தகைய சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்குப் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.தற்போதைய அரசு இயலாமையில் உள்ள அரசு என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *