மீனாட்சி கோவில் குடமுழுக்கு விழாவில் எந்த அரசியல் தலையீடு இல்லை, பாஸை நாங்கள் கண்ணில் கூட பார்க்கவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார்,
குடமுழுக்கிற்கான 100% பணிகள் நிறைவு பெற்றுள்ளன. காவல், சுகாதார துறையினர் இரண்டு ஷிப்டுகள் பணி செய்கின்றனர். மின் தடை ஏற்படாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவில் மேல் தளத்தில் எவ்வளவு நபர்களை அனுமதிப்பது என்பது தொடர்பாக இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. 9000 பேர் அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம. ஆனால், அவர்களை அனுமதிக்க முடியுமா என்பது பற்றி Stability check செய்து கொண்டிருக்கிறோம். அதன் பின்னரே முடிவு செய்வோம் என்றார்.
பொது மக்களுக்கு குலுக்கல் முறையில் 2000 பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் மேலே அனுமதிக்கப்படுவார்கள்.சித்திரை வீதியில் மக்கள் நின்று தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
இது கோபுரத்திற்கு செல்வோர் வந்து செல்வதற்கான வழி மட்டுமே.
குடமுழுக்கு பணியில் அரசியல் இல்லை. மக்கள் பாதுகாப்பு சார்ந்து மட்டுமே பணியாற்றுகிறோம்.
இதில் அரசியல் இல்லை. அறங்காவலர்கள் குழுவை தொடர்பு கொண்டு அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய சொல்கிறேன்.
பாஸ் விஷயத்தில் நாங்கள் எந்த தலையீடும் செய்யவில்லை. பாஸை கண்ணில் கூட பார்க்கவில்லை என்றார்.
அமைச்சர் ரமேஷ் கூறுகையில்,
தமிழ் ஓதுவார்கள் யாக பூஜைகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு
அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் யாரும் வருத்தம் தெரிவிக்கவில்லை.
கலசத்தில் நீர் ஊற்றவும், கருவறை செல்லவும் தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதி உண்டு.என்றார்.
