Headlines

வீட்டிற்குள் புகுந்த காட்டு பன்றி – முதியவரை முட்டித் தாக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

வீட்டிற்குள் புகுந்த காட்டு பன்றி – முதியவரை முட்டித் தாக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரசேரி பகுதியில் வீட்டிற்குள் புகுந்த காட்டு பன்றி, வராண்டாவில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த முதியவரை திடீரென முட்டித் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் வராண்டாவில் முதியவர் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த காட்டு பன்றி, அவரை நோக்கி வேகமாகச் சென்று முட்டியது. இதில் எதிர்பாராத தாக்குதலால் முதியவர் நிலைகுலைந்தார்.

இந்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகின்றன. குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு விலங்குகள் புகுந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *