Headlines

அன்பில் மகேஸ் இல்லத்தில் சோதனை – மு.க.ஸ்டாலின் கண்டனம்

அன்பில் மகேஸ் இல்லத்தில் சோதனை - மு.க.ஸ்டாலின் கண்டனம்

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்தி வரும் சோதனைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
தவெக அரசின் மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் லண்டனில் முதலமைச்சர் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார்.

மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை த.வெ.க. அரசு ஏவியுள்ளது .இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம் .

எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *