Headlines

திமுக இணையதள நாய்கள் : துரை வைகோ ஆவேசம்

திமுக இணையதள நாய்கள் : துரை வைகோ ஆவேசம்

திமுகவின் நாய்கள்
இணையதளத்தில் அசிங்கமாக பதிவிட்டு வருகின்றனர். கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் என துரை வைகோ எம்பி ஆவேசமாக தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்காக, திருச்சி குடமுருட்டி அருகே உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்:-

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளை சந்திப்பதற்காகவும் முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார். மேலும், அங்கு நடைபெறும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்கிறார். தமிழ்நாட்டை சேர்ந்த நட்சத்திர நடிகர் அஜித் குமார் இந்த பந்தயத்தில் பங்கேற்பது பெருமைக்குரிய விஷயம்.

இது போன்ற உலகளாவிய போட்டிகளை சென்னைக்கு கொண்டு வருவது சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன், மோட்டார் விளையாட்டுத்துறைக்கும் ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேர அரசியலை தொடங்கியதே திமுகதான். பாஜக அதிமுக திமுக கூட்டணி குறித்த நகர்வு ஏற்படும்போதே நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டோம். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் முக.ஸ்டாலினும் பங்காளிகள். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, திமுகவுடன் இணக்கமான போக்கை மேற்கொண்டதை கண்டித்தே பல தொண்டர்களும், நிர்வாகிகளும் அதிருப்தி அடைந்து அதிமுகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்தனர்.

திமுக அதிமுக இணைந்தால் எல்லா உண்மைகளும் வெளியில் வந்துவிடும். அவர்கள் ஏற்கனவே சேர்ந்துவிட்டனர். பாஜகவுடன் டீலிங் பேசுவது உள்ளிட்ட எல்லா விஷயங்களும் நடந்து வருகிறது. டீ லிமிடேஷன் சட்ட மசோதா எப்போது வேண்டுமானாலும் கொண்டு வரப்படலாம். அந்த மசோதாவை வெற்றி பெற வைப்பதற்கு ஒன்றிய அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது தெரியும். திமுக – அதிமுக – பாஜக ஒரு அறிவிக்கப்படாத கூட்டணி. எந்த கூட்டணி வந்தாலும் மக்கள் கூட்டணி எங்களுடன் தான் உள்ளது. வருகின்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

கூட்டணி கட்சிகளின் உழைப்பாலேயே தாங்கள் வெற்றிபெற்றதாக திமுகவினர் கூறுவது “பண்ணையார் அரசியலை” ஒத்தது. மக்கள் தான் எஜமானர்கள்; யாருடைய தயவிலும் யாரும் வெற்றி பெறவில்லை. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் வெளியேறியதற்கு திமுகவின் பண்ணையார் தன்மையும், பெரிய இடத்து மனப்பான்மையுமே முக்கியக் காரணம். அறிஞர் அண்ணா கொண்டுவந்த சமத்துவ கொள்கைக்கு இது எதிரானது. எங்களுக்காவது மக்கள் பிச்சை போட்டார்கள். திமுக தலைவருக்கு கொளத்தூரில் அந்த பிச்சையை கூட மக்கள் போடவில்லை.

பருவமழை பொய்த்து காரணமாக மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியிலும் இது இருந்தது. மின்சார தட்டிப்பாட்டிற்கு கடந்த 30-40 ஆண்டுகளாக மின்சார துறையில் முறையான கட்டமைப்புப் பணிகள் செய்யப்படாததே காரணம். காவல்துறையில் 28 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு அரசு இதற்கான தீர்வை எட்ட முயன்று வருகிறது.

காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளின் விவகாரத்திலும் திமுக உள்நுழைந்து கைப்பற்ற நினைத்தது. காங்கிரஸ் கட்சி விவகாரத்தில் திமுக நுழைந்தது ராகுல் காந்திக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த காலத்தில் 360 டிகிரி தாக்குதல் என்மீது தொடுக்கப்பட்டது. சொந்த கூட்டணி கட்சிக்காரர்கள் இடையே நியாயம், சமத்துவத்தை கடைபிடிப்பதில்லை. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து திருமாவளவன் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. திமுக கூட்டணியில் இருந்த கூட்டணி கட்சிகள் வெளியேறியதற்கு திமுகவின் பண்ணையார் தன்மையும், பெரிய இடத்து மனப்பான்மையுமே முக்கியக் காரணம். திமுக கூட்டணியில் நடந்த பல விஷயங்களை நானும் கூட்டணி கட்சியினரும் வெளியில் சொல்லாமல் உள்ளோம்.

திமுகவினர் அவர்களது அடுத்த தலைமுறை கட்சிக்காரர்களுக்கு நாகரிகத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.
அரசியல் ரீதியாக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும். அநாகரிகமாக பேசக்கூடாது. திமுகவினர் இணையதளத்தில் நாய்களை வைத்துக்கொண்டு அசிங்கமாக பதிவிட்டு வருகின்றனர். கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் தனக்கு நீண்டகாலமாக நல்லுறவு உண்டு. பொதுவுடைமை சித்தாந்தத்தின் மீது தனக்கு அதிக ஈடுபாடு உள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பே தவிர, தேர்தல் கூட்டணி சார்ந்த சந்திப்பு அல்ல. கம்யூனிஸ்ட் தோழர்கள் கொள்கை உறுதியில் சமரசம் செய்துகொள்ளாதவர்கள் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *