Headlines

‘தர்மன்’, ‘ஜெயிலர்-2’ ஸ்டைலில் விநாயகர் சிலைகள்

'தர்மன்', 'ஜெயிலர்-2' ஸ்டைலில் விநாயகர் சிலைகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். மண்பாண்டக் கலைஞரான இவர், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராகவும் இருந்து வருகிறார்.
தற்போது நாடு முழுவதும் பிள்ளையார் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ரஞ்சித் தனது அபிமான நடிகரான ரஜினிகாந்த் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் வித்தியாசமான முறையில் விநாயகர் சிலைகளை வடிவமைத்துள்ளார்.

அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் புதிதாக நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்பட கதாபாத்திரத்தின் தோற்றத்திலும், ‘ஜெயிலர் 2’ திரைப்பட கதாபாத்திரத்தின் தோற்றத்திலும் பிள்ளையார் சிலைகளைத் தத்ரூபமாகக் களிமண்ணால் செய்து அதற்கு நேர்த்தியாக வர்ணம் தீட்டி அசத்தியுள்ளார்.
ரஜினிகாந்தின் திரைப்படக் கதாபாத்திரங்கள் மற்றும் அவரது பிரத்யேக ஸ்டைல்களைப் பிரதிபலிக்கும் வகையில், மிகவும் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலைகள் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

ரஜினி தோற்றத்திலான இந்த விநாயகர் சிலைகளைப் பார்த்து ரசித்துவரும் அப்பகுதிப் பொதுமக்களும், ரஜினி ரசிகர்களும் மண்பாண்டக் கலைஞர் ரஞ்சித்திற்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *