Headlines

தொடர் மின்வெட்டால் செல்போன் வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி : அன்புமணி குற்றச்சாட்டு

தொடர் மின்வெட்டால் செல்போன் வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி : அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடிப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டதால், செல்போன் வெளிச்சத்தில் பேட்டி அளிக்கும் நிலை ஏற்பட்டது.

தமிழகத்தின் மின் தேவை தற்போது 20,500–21,000 மெகாவாட் அளவில் இருப்பதாகவும், கடந்த ஆண்டு செப்டம்பரை விட இது 4,000 மெகாவாட் அதிகம்.
கூடுதல் மின் தேவையை சமாளிக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்படாததே மின்வெட்டுக்கு காரணம்.

சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை மின்வெட்டை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னை பருத்திப்பட்டில் நிலத்தடி மின்கம்பிகள் சேதமடைந்ததை சரிசெய்ய 8 மணி நேரத்துக்கும் மேல் ஆனதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மின்வெட்டை சமாளிக்க 2,000 மெகாவாட் மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக மின்வெட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *