தாம்பரம் அருகே 23 ஆயிரம் விநாயகர் சிலைகள் காட்சிபடுத்தப்பட்ட பிரமாண்ட கண்காட்சியை அமைச்சர் சரத்குமார் துவக்கி வைத்தார்.
சென்னை அடுத்த தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் 20 ம் ஆண்டு மாபெரும் விநாயகர் கண்காட்சி துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை காண பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கபடும் நிலையில் , இதனை மனித வள துறை அமைச்சர் சரத்குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில் தங்கம், வெள்ளி ,மரம், கல் ,பிளாஸ்டிக் கண்ணாடி போன்ற பல்வேறு பொருட்கள் மற்றும் உலோகங்களால் ஆன ஒரு செண்டிமீட்டர் முதல் சுமார் 12 அடி உயரம் வரையிலான சுமார் 23 ஆயிரம் விநாயகர் சிலைகள் காட்சிபடுத்தபட்டுள்ளன. மேலும் இதில் மக்களின் அன்றாட செயல்பாடுகள், சமூக ஒற்றுமை, புராதான நிகழ்வுகள், நவீன காலம் போன்ற பல வகையான விநாயகர்கள் காட்சிபடுத்தபட்டுள்ளன.
