Headlines

முதலமைச்சர் கோப்பை போட்டியில் சிலம்பத்தை சேர்க்க கோரிக்கை

முதலமைச்சர் கோப்பை போட்டியில் சிலம்பத்தை சேர்க்க கோரிக்கை

திருப்பூரில் நடந்த தொடு முறை சிலம்ப போட்டியில் இளம் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். முதலமைச்சர் கோப்பை போட்டியிலும் சிலம்பத்தை சேர்க்க வேண்டும் என போட்டி ஏற்பட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

உலக சிலம்ப கூட்டமைப்பு அங்கீகாரத்துடன் திருப்பூர் தற்காப்பு கலை மையம் சார்பில் மண்டல அளவிலான தொடு முறை சிலம்ப போட்டிகள் திருப்பூரில் இன்று நடைபெற்றது.

இதில் 7 முதல் 8 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவு, 10 வயது 12 வயது 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவுகள் என 4 தனித்தனி பிரிவுகளில் சப் ஜூனியர் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிலம்பம் கையாலுதல் மற்றும் எதிராளி கள் மீது தொடுதல் உள்ளிட்டவற்றை அடிபப்டையாக கொண்டு தொழில்நுட்ப மதிப்பெண் கணக்கீடுகள் மூலம் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் ஏராளமான இளம் வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இளம் தலைமுறை நேரடிய சில மக்களை ஊக்குவித்து பாரம்பரிய விளையாட்டை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு முதலமைச்சர் கோப்பை காண போட்டியில் சிலம்பத்தை சேர்க்க வேண்டும் எனவும் போட்டி ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *