Headlines

இந்தியன் ரேசிங்பெஸ்டிவல் : சீறிப்பாய்ந்த கார்கள்,பைக்குகள்

இந்தியன் ரேசிங்பெஸ்டிவல் : சீறிப்பாய்ந்த கார்கள்,பைக்குகள்

கோவையில் இந்தியன் ரேசிங் பெஸ்டிவல் 2026 முதல் சுற்று கோலாகல துவங்கியது. போட்டிகளில் சீறிப்பாய்ந்த கார்கள், பைக்குகளை பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வே பந்தயத் தளத்தில் நடைபெற்ற முதல் சுற்றில், அதிவேக கார்கள் மற்றும் பைக்குகள் சீறிப்பாய்ந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தின.

இதனுடன் JK Tyre வழங்கும் Royal Enfield Continental GT Cup பந்தயங்களும் நடைபெற்றன.பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்று, தங்களது ஓட்டுநர் திறமையை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக Indian F4 கார் பந்தயம் மற்றும் Royal Enfield Continental GT Cup-ன் Amateur மற்றும் Professional பிரிவுகளில் அடுத்தடுத்த சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. அதிவேகம், பரபரப்பான திருப்பங்கள், போட்டியாளர்களின் கடும் சவால் என, கோவை கரி மோட்டார் ஓடுதளம் முழுவதும் ரேசிங் சத்தத்தால் அதிர்ந்தது.

வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த மோட்டார் பந்தயத் திருவிழா, மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்கு உற்சாகமான அனுபவமாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *