Headlines

மதுராந்தகம் : பற்றி எரிந்த காரால் பரபரப்பு

மதுராந்தகம் : பற்றி எரிந்த காரால் பரபரப்பு

மதுராந்தகம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடிரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக காரில் பயணம் செய்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புதூர் கிராமத்தில் உள்ள பாலாற்று பாலத்தில் பவுஞ்சூரில் இருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி திருமண நிகழ்ச்சிக்காக சென்ற காரில் முன்பக்கத்தில் புகை வருவதை கண்டு காரை சாலையோரம் நிறுத்தினர்.

அப்போது கார் திடீரென தீப்பற்றி முழுவதும் எரிய தொடங்கியது. இதை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.

இந்த கார் தீ விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் .
இந்த சம்பவம் குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *