நாம் ரீல் விட வேண்டியது இல்லை ரியல் சாதனைகளை சொன்னாலே போதும் வெற்றி பெற்று விடலாம் என முன்னாள் அமைச்சர் சாமிநாதன் இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே உரையாற்றினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யா அறிவிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் சாமிநாதன் மற்றும் பத்மநாபன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணிகள் தொடர்பாக எவ்வாறு செயல்பட வேண்டும் என திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் உன்னால் அமைச்சர்கள் டி ஆர் பி ராஜா, சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேர்தல் பணிகள் குறித்து அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர் அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சாமிநாதன், கடந்த ஐந்தாண்டு கால சாதனைகளை நாம் சொன்னாலே போதும் ரீல் விட வேண்டிய அவசியம் இல்லை ரியல் சாதனைகளை சொன்னாலே போதும். இந்த ரீல் ஆட்சி பற்றி மக்களிடம் எடுத்துரைத்தால் எளிதாக வெற்றி பெறலாம் என தெரிவித்தார்.
