விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினங்கள் காரணமாக வாழை இலையின் தேவை அதிகரித்து இருப்பதால் அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக வாழை விவசாயம் செய்யப்படுகிறது.
தற்போது காமராஜர் மார்கெட்டில்(சந்தைபேட்டை)வாழை இலையின் விலை கடுமையான உயர்வடைந்து, ஒரு கட்டு வாழை இலை 6000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி தினம் மற்றும் ஆவணி முகூர்த்தம் உள்ளிட்ட காரணங்களால் வாழை இலையின் தேவை அதிகரித்திருப்பதால்
அதன் விலை பல மடங்கு உயர்ந்து 6 ஆயிரம் ரூபாய் விற்பனை ஆகிறது. இதனால் சில்லறை விற்பனையிலும் வாழை இலை விலை உயர்ந்து ஒரு இலை 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
