Headlines

ஸ்டாலினை தியாகி என்றெல்லாம் சொல்ல முடியாது : அமைச்சர் நிர்மல்குமார்

ஸ்டாலினை தியாகி என்றெல்லாம் சொல்ல முடியாது : அமைச்சர் நிர்மல்குமார்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மாநகர காவல் ஆணையர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் உடன் இருந்தனர்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்மல் குமார்,
கும்பாபிஷேகத்திற்காக 8000 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 2000 பொதுமக்களுக்கு பாஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பைப் மூலமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.

தற்காலிகமாக கழிவறையில் தண்ணீர் தட்டுப்பாடு என்று கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது FRS சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறையில் இருந்தால் அனைத்தையும் கண்காணிப்பார்கள் 6000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

15ஆம் தேதியிலிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்படும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 16ஆம் தேதி கோவிலை சுற்றியுள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை விடுவது குறித்தும் 17ஆம் தேதி உள்ளே விடுமுறை குறித்து ஆலோசித்து வருகிறோம்.

மின்சாரத் துறையிலிருந்து 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

முதல்முறையாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அனைத்து துறை தலைமை அதிகாரிகளும் கண்காணிப்பார்கள் 56 பார்க்கிங் அடையாளம் காணப்பட்டு 8000 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பக்தர்கள் எந்த சிரமமின்றி வந்து போவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலே செல்ல 2000 பக்தர்களுக்கு பாஸ் வழங்கப்பட உள்ளது

லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
கூட்ட நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரே நேரத்தில் 8,000 பேரும் இறங்கி செல்ல ஏற்பாடு பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன பக்தர்கள் உள்ளே வரும்போது எந்த சிரமம் ஏற்படாது 53 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாநகரில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் 17ஆம் தேதி உள்ளூர் விடுமுறை குறித்து மாவட்ட நிர்வாகம் இறுதியானவுடன் அறிவிப்பு வரும்.

நீதிபதிகள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்ந்தவர்களுக்கு நிர்வாகத்தின் இருந்து பாஸ் 5 ஆயிரம் பேருக்கு கோவில் நிர்வாகம் இதனை முடிவு செய்கிகது. இந்து அறநிலைத்துறை நிர்வாகம் முடிவு செய்கிறது இதில் யார் தலையீடும் இருக்காது கோவில் நிர்வாகம் தான் முதற்கட்டமாக 2000 பாஸ்கள் கொடுக்கிறார்கள்.

தமிழ் ஓதுவார்களை புறக்கணிப்பதாக தமிழ் அமைப்புகள் கூறுவது குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர்,
அது போன்ற எந்த பாகுபாடும் நிர்வாகத்தில் இருக்காது. இந்து அறநிலைத்துறையில் என்ன திட்டமிடுகிறார்களோ எந்த பாகுபாடும் இருக்காது. தேவையில்லாமல் எதையும் சொல்ல வேண்டாம் இந்து அறநிலையத்துறையிலிருந்து என்ன அறிவிப்பு உள்ளதோ அது படி செய்கிறார்கள்.

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி குறித்த கேள்விக்கு,

எம்பிகள் இருந்தால் தான் இந்தியா கூட்டணியில் இருக்க முடியும் அதுவரை தமிழகத்தில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி அமைத்துள்ளோம் இன்னும் நிறைய காலகட்டம் இருக்கிறது பத்திரிகையாளர்கள் திரும்பத் திரும்ப அதையே பேச வேண்டாம் வேற ஏதாவது பேசலாம்.
சாலமன் பாப்பையாவிற்கு அரசு மரியாதை குறித்து ஆலோசித்து விட்டு பேசுவோம்.

முதலமைச்சர் விஜய் மிசா குறித்து பேசியதை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு குறித்த கேள்விக்கு,

இவர்கள்தான் இதற்கு ரியாக்ட் பண்ணுகிறார்கள். இதில் சர்ச்சை ஒன்றுமில்லை மிசாவில் போனாரா இல்லையா என்பதுதான் சர்ச்சை மிசாவில் கைதான விவகாரத்தை மீண்டும் மீண்டும் பேசுவதால் அவர்களுக்குத்தான் நெகட்டிவ்.

ஸ்டாலினுக்கு டிடக்சன் ஆர்டர் உள்ளதா? இதுவரைக்கும் ஆர்டர் காட்டவில்லை அவர்களது மீடியாவில் ஆவணங்கள் வெளியிட்டுள்ளனர். அது சர்க்காரியா கமிஷனில் போட்ட விட்னஸ் டாக்குமெண்ட் என சொல்கிறார்கள்.

ஏதாவது புத்தகத்தை எடுத்துக்கொண்டு முரசொலியில் யாராவது அப்போது எழுதியிருக்க ஒரு ஸ்டாலின் மிசாவில் கைதானர் என்பதை கூட ஒரு ஆதாரமாக காட்டுவார்கள்

ஒருவர் கைது செய்திருந்தால் டிடென்சன் காப்பி காட்ட வேண்டும் டிடென்ஷன் காப்பி இல்லாத ஒரே தியாகி ஸ்டாலின் தான்

மீண்டும் மீண்டும் ஸ்டாலினை தியாகியாக காட்ட முயற்சிப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.
ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை வேறு ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார் என்பது 30,40 வருஷ சர்ச்சை.

இதுவரை அவர்களால் ஒரு டிடென்சன் ஆர்டர் கூட கொடுக்க முடியவில்லை. ஒரு தியாகி கைதானால் எதற்கு டிடக்சன் காப்பி அழிக்கப்பட்டது. 1980க்கு பிறகு ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கான ஆதாரம் கிடைக்கக்கூடாது என அழித்து விட்டார்கள் என சொல்கிறார்கள்

எல்லாருக்கும் டிடென்சன் காப்பி இருக்கிறது. ஸ்டாலினுக்கு மட்டும் ஏன் இல்லை ஏதோ புத்தகத்தையும் பத்திரிகை செய்தியையும் காட்டுகிறார்கள்.

அதனை பார்த்து அவரை தியாகி என்றெல்லாம் சொல்ல முடியாது திரும்பத் திரும்ப அதனை பெரிசாக்கி பேசுவதால் ஒன்னும் பிரயோஜனம் இல்லை.

திமுக சார்பில் வேட்பாளர் நிறுத்துகிறார்கள் உள்ளூரில் எக்மோரில் விலை போகவில்லை உள்ளுரிலே விலை போகாத பரந்தாமன் போன்றவரை மதுராந்தகத்தில் நிப்பாட்டுகிறீர்கள். நாளைக்கு டெபாசிட் வாங்க முடியாததற்கான காரணம் பரந்தாமன் என்று தான் சொல்வார்கள்.

இப்போதே தோல்விக்கான காரணங்களை தேடுகிறார்கள். மக்களுக்கு தெளிவாக தெரியும் இரண்டு இடைத்தேர்தலிலும் திருமங்கலம் ஃபார்முலா என எத்தனை 100 கோடி வந்தாலும் மக்கள் அதனை வாங்கிக் கொண்டு மக்கள் என்ன செய்வார்களோ அதனை செய்வார்கள்.

இவர்கள் எங்கே இருந்து கொள்ளையடித்தார்கள் எத்தனை லட்சம் கோடி தமிழகத்தில் இருந்து கொள்ளையடித்தார்கள் 100 கோடி 200 கோடி ஒவ்வொரு இடத்திற்கும் வருவார்கள் மக்களுக்கு உங்களை எப்படி உங்களை சமாளிக்க வேண்டும் என தெரியும் அதனை வாங்கிக் கொண்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியும்.

இந்த இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் டெபாசிட் கூட வராது என நன்றாக தெரியும். அதற்காக தான் பரந்தாமன் போன்ற வெளியூர் வேட்பாளர்களை மதுராந்தகத்திற்கு எழும்பூரில் இருந்து கொண்டுவருகிறார்கள்.

பரந்தாமனை மக்கள் விரட்டி அடித்தார்கள் தோல்விக்கான காரணம் இப்போது தெரிந்து தான் உள்ளூரில் நிற்பதற்கு ஆள் தயாராக இல்லை என்பதால் வெளியூரில் இருந்து வேட்பாளர் நிறுத்துகிறார்கள் எதையாவது பேசுகிறார்கள்.

திமுக அறிவித்த போராட்டமே தெரியவில்லை 50 பேர் கூட இருக்க மாட்டார்கள்.
போராட்டம் பண்ண வேண்டும் என ஒரு போராட்டம் நடத்துகிறார்கள். அவருடைய தவறுகளை சொன்னால் திறந்தவெளி மைதானமே தருகிறோம் தாராளமாக போராடுங்கள் என்றார்.

பொதுமக்கள் எல்லோரும் பார்த்து சிரிக்கிறார்கள். மீண்டும் ஸ்டாலினை மிகப்பெரிய தியாகியாக புரஜெக்ட் செய்தால் மக்கள் நம்ப மாட்டார்கள்.
இரா.செழியன் மொழிபெயர்த்த புத்தகம் என்னிடம் உள்ளது. அதில் ஒரு இடத்தில் கூட இவ்வளவு பெரிய தியாகி ஸ்டாலின் பெயர் இடம் பெறவில்லை,எழுதவில்லை இங்கு இல்லையென்றால் வேறு எங்கு இருக்கும்?
திமுகவை மக்கள் தூக்கி எறிந்து பல நாட்கள் ஆகிவிட்டது.

முதல்வரின் லண்டன் பயணம் குறித்த கேள்விக்கு,

தொழில் ரீதியான நிகழ்ச்சிகளுக்காக ஏற்கனவே திட்டமிட்டபடி லண்டன் சென்றுள்ளார் என்றார்.

புதிய தலைமைச் செயலகம் பட்டினம்பக்கத்தில் வேண்டாம் என்று இடதுசாரிகள் நடத்தும் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *