Headlines

கூடலூர் : ஆட்கொல்லி புலி நிச்சயம் பிடிபடும் – வனத்துறை அமைச்சர் உறுதி

கூடலூர் : ஆட்கொல்லி புலி நிச்சயம் பிடிபடும் - வனத்துறை அமைச்சர் உறுதி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓ வேலி பகுதியில் கடந்த மாதம் புலித்தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அப்பகுதி மக்கள் ஆட்கொல்லி புலியை பிடிக்க வேண்டும் என போராட்டங்களை நடத்தினர். இதனை எடுத்து தமிழக அரசு ஆட்கொல்லி புள்ளியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும் கோவில் பகுதியில் 190கேமராக்களை பொருத்தியும் 14 இடங்களில் கூண்டுகளை வைத்தும் புலியை பிடிக்க நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22 நாட்களாக புலி கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

இந்த நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் நேற்று ஓவேலி பகுதியில் புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ள இடங்களை வனத்துறை வாகனம் மூலம் சென்று பார்வையிட்டார். மேலும் புலியை விரைந்து பிடிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் புலியை பிடிக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில் வனத்துறையினர் தீவிரமாக புலியைப் பிடிக்க 22 நாட்களாக போராடி வருகின்றனர். நிச்சயமாக இரண்டு பேரைக் கொன்ற புலி பிடிக்கப்படும் என கூறினார். மேலும் புலி தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மனித வனவிலங்கு மோதலால் ஏற்படும் இழப்பீட்டிற்கு ரூபாய் 20 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் அதில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முக்கிய பகுதியாக சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.

ஓவேலி பகுதியில் புலி அச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள 50 குடும்பத்திற்கு தவெக சார்பில் ஐந்தாயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *