மிசா காலத்தில் ஸ்டாலின் கைதானது உண்மை. ஆனால் அவர் அரசியல் காரணங்களுக்காக கைதானவரா என்பது அது ஒரு கேள்வி குறிதான்.
எதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பதை நாகரிகம் கருதி சொல்ல விரும்பவில்லை என துரை வைகோ கருத்து தெரிவித்த நிலையில் அவரது தந்தை வைகோ ஸ்டாலின் மிசா கைதை புகழ்ந்து பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.
புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியில் சோழா எஸ்டேட் பகுதியில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டது அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ரேஷன் கடையை திறந்து வைத்தார்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ,
இடைத்தேர்தலில் எங்கள் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
கடைசி நேரத்தில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கடைசி நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையும் என நம்புகிறேன். என்றார்.
லஞ்சம் அற்ற ஆட்சியை முதல்வர் விஜய் கொடுத்து வருகிறார்.
அரசியல் வாதிகள் மத்தியில் லஞ்சம் ஏதும் இல்லை, அதிகாரிகள் மட்டத்தில் வேண்டுமானால் சில இடங்களில் இருக்கலாம்.
நாட்டின் பாதுகாப்பு கருதி மிசா சட்டம் 1975 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்டது, அது கண்டிக்கத்தக்க வரலாற்று பிழை.
அந்த மிசா சட்டத்தில் அரசியல் காரணங்கள் மட்டுமின்றி பிற காரணங்களுக்காகவும் பலர் கைது செய்யப்பட்டனர்,
திமுகவில் முதல் கைது வைகோ தான். கடைசியாக விடுதலையானதும் வைகோ தான்.
பழைய செய்தி குறிப்பை பார்க்கும் போது,ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டது உண்மை தான்,
ஆனால் அவர கைது செய்யப்பட்டதற்கு
முழுமையான அரசியல் காரணம் என்பது 100% இல்லை,
அரசியல் காரங்களுக்காக தான் அவர் அப்போது கைது செய்யப்பட்டாரா..? என்பது கேள்விக்குறி தான். அந்த செய்தி என்பது பொய்.
அரசியல் நாகரிகம் கருதி இந்த விவகாரத்தில் நான் இதற்கு மேல் பேச விரும்பவில்லை,
பட்டின பாக்கத்தில் தலைமை செயலகம் வந்தால் மீனவ கிராம மக்கள், சுற்று சூழல் , பாதிப்பு வரும் போக்குவரத்து நெரிசல் வரும் என சொல்கிறார்கள்,
திருச்சியை இரண்டாம் தலைநகரமாக கொண்டு வரவேண்டும் என முதல்வரிடம் நான் ஏற்கனவே நான் கோரிக்கை வைத்தேன்.
இது முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவு.
புதிய தலைமை செயலகத்தை திருச்சிக்கு கொண்டு வரவேண்டும்,
அது தான் தமிழகத்திற்கு நல்லது.
கடுமையான மின் வெட்டு , திருட்டு இவற்றுக்கு எல்லாம் அடித்தளம் இட்டது கடந்த 30 ஆண்டு கால ஆட்சிகள்.
இப்போது வந்த தவெக அரசை குறை சொல்ல முடியாது.
அதற்கு தீர்வு காண இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாணிக்கம் தாகூர் சரியாக கூறியுள்ளார்,
பிரதமர் வேட்பாளர் இந்தியா கூட்டணி தான் முடிவு செய்யும்,
அன்றைய காலகட்டத்தில் மு.க. ஸ்டாலினை பிரதமர் என அந்த கட்சியினர் கூறினார்கள் அப்போது ஏன் விமர்சனம் வரவில்லை.
அதேபோல அந்தந்த கட்சியினர் அவர்களது தலைவரை சில பொறுப்புகளை சொல்லி அழைப்பது இயல்புதான்.
திருமாவளவன் சட்டமன்றத்திற்கு போக வேண்டும் என அந்த கட்சியினர் விரும்பினர்.
ஆனால் அவரை போட்டியிட விடாமல் தடுத்தனர்.
திருமாவளவனுக்கு நடந்தது, எங்களுக்கு நடந்தது.கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நடந்தது .காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா கட்சிகளுக்கும் நடந்தது.எல்லாவற்றையும் திமுக தீர்மானித்தது.
இதனால்தான் திமுக மீது காங்கிரஸ் தலைமைக்கு வெறுப்பு வந்தது.
திருமாவளவன் குறைபட்டுக் கொள்வது 100% உண்மை,
எங்களை அவர்கள் சின்னத்தில் நிற்கச் சொல்லி எங்கள் வாய்ப்புகள் அனைத்தையும் பறித்தனர்.
தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளில் ஆட்சியில் நீடிக்கும் ஒரு மாதத்தில் இந்த ஆட்சி கவிழும், ஆறு மாதத்தில் கவிழும் ஒரு வருடத்தில் கவிழும் என்று எதிர்க்கட்சிகள் அவர்களுடைய ஆசையை கூறி வருகின்றனர் அது ஒருபோதும் நடக்காது.
அது கனவாக தான் இருக்கும் நினைவு ஆகாது.
பேட்டியின் போது உங்கள் கையில் சிகப்பு கருப்பு சிகப்பு கலரில் பட்டை கட்டிருப்பது ஏன் அதன் ரகசியம் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பலர் தங்கள் கட்சியின் சின்னத்தில் வேட்டியை கட்டிக் கொள்வார்கள் என்னால் வேட்டி கட்டிக் கொள்ள முடியாது. எனக்கு பழக்கமில்லை ஆகவே எங்கள் கட்சியின் கொடி வண்ணத்தில் நான் கையில் பட்டையை அணிவித்து உள்ளேன் இதன் ரகசியம் இது தான்.அதை நான் பெருமையாக கருதுகிறேன். என்றார்.
துரை வைகோவின் ஸ்டாலின் மிசா கைது குறித்த கருத்து சர்ச்சையான நிலையில், அவரது தந்தை ஸ்டாலின் அனுபவித்த மிசா கொடுமைகளை பேசும் வீடியோ வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், நள்ளிரவு ஜூன் 25, ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டார்கள். 48 மணி நேரத்திற்குள்ளாக நெருக்கடி நிலைப் பிரகடனத்தை எதிர்த்து, தானே எழுதி கொண்டு வந்த தீர்மானத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயற்குழுவிலே அண்ணன் கலைஞர் நிறைவேற்றினார்.
டிசம்பர் திங்களிலே கோவையிலே மாநில மாநாடு. ஜனவரி திங்கள் இறுதியிலே ஆட்சி கலைக்கப்பட்டது. சர்வாதிகாரக் கொடுவாள் வீசப்பட்டது.
திருமணமாகிய 5 மாதங்களில், வாலிபத்தின் வசந்தத்தைக் காண வேண்டிய நாளில், மணமகளோடு இருக்க வேண்டியவரை காராகிரகத்துக்கு அண்ணன் கலைஞர் அனுப்பி வைத்தார்.
ஸ்டாலின் சிறைச்சாலையில் தாக்கப்படுகிறபோது, கன்னத்தில் ஓங்கி முதலில் விழுந்த அறையோடு அடுத்தடுத்த அடிகள் பாய, தங்கத் தமிழ்மகனை (ஸ்டாலினை) காப்பாற்ற, தன்னையே பலியாக்கிக் கொள்ளத் துணிந்து பாய்ந்தான் சிங்கமகன் சிட்டிபாபு.
சிறைச்சாலையிலிருந்து, நெருக்கடி நிலை காலத்தில், பாளையங்கோட்டை சிறையிலிருந்து வாரத்துக்குப் பத்து கடிதங்களில், ஒரு கடிதத்தைக் குடும்பத்தாருக்கும், ஒன்பது கடிதங்களை வேறு சிறைகளில் இருப்போருக்கும் எழுதி வந்தேன்.
அண்ணன் முரசொலி மாறன் அவர்கள் பதில் மடல் எழுதினார். சிட்டிபாபு தாக்கப்பட்டதைக் குறித்து எழுதினார். “உயிர் அன்புச் சகோதரா…” என அண்ணன் முரசொலி மாறன் எழுதிய அந்த மடலை இன்னும் வைத்திருக்கிறேன். இவ்வாறு அதில் வைகோ பேசி உள்ளார். இந்த வீடியோவை திமுகவினர் பகிர்ந்து துரை வைகோவுக்கு பதிலடி தந்து வருகின்றனர்.
