Headlines

கோவை : மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

கோவை : மாநகராட்சி கூட்டத்தில் திமுக - காங்கிரஸ் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் சிறந்த மாநகராட்சி விருதை மக்கள் பிரதிநிதிகளான மேயர் உள்ளிட்டோரை அழைத்துக் கொடுக்காமல் நகராட்சி நிர்வாக இயக்குனர் மட்டுமே அழைத்து கொடுத்ததற்காக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அப்போது முதல்வர் பேசுவதே இல்லை என்கின்ற குற்றச்சாட்டு முன்வைத்து பேசினர். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் கவுன்சர்கள் முதல்வர் பேச வேண்டிய இடத்தில் பேசுவார் என கருத்து தெரிவித்தனர். அப்போது இரு தரப்பினரிடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மாநகராட்சி அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கோவை : மாநகராட்சி கூட்டத்தில் திமுக - காங்கிரஸ் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

இதனிடையே வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் டென்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி அரங்கிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அரங்கிற்குள்ளேயும் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அது தொடர்பாக விவாதம் மேற்கொள்ளப்பட்டு தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக மேயர் தெரிவித்தார். மேலும் விரிவான அறிக்கை இது தொடர்பாக கொடுக்க உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ரவிதேஜா கூறினார்.

இதனைத் தொடர்ந்து சின்னவேடம்பட்டி ஏரியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கோடிக்கணக்கில் பணம் பெற்று விட்டதாக பத்திரிகைகளில் வெளியான செய்திக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *