Headlines

தொடர் மின்வெட்டு : 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயரிழப்பு

தொடர் மின்வெட்டு : 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயரிழப்பு

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டை அடுத்த டிடி.மோட்டூர், காமராஜ நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல் (வயது 26) தீபா (வயது 24) தம்பதியினர்.இத்தம்பதிக்கு கௌரவி (2) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றுள்ளனர்.

தொடர் மின்வெட்டு காரணமாக சக்திவேல் தீபா ஆகியோர் குழந்தையை வீட்டில் உறங்க வைத்துவிட்டு வீட்டின் வெளியே அமர்ந்து பேசி கொண்டுடிருந்துள்ளனர்.

அப்போது வீட்டிற்குள் சத்தம் கேட்டுள்ளது அவர்கள் சென்று பார்த்த பொழுது வீட்டிற்குள் திறந்த வெளியில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் தனது இரண்டு வயது பெண் குழந்தை கௌரவி விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக குழந்தையை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் குழந்தையின் சடலத்தை பெற்றோர் மற்றும் உறவினர்களும் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர்.

குடியாத்தம் மருத்துவமனையில் இருந்து பேரணாம்பட்டு காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடலை கேட்டபோது, பெற்றோர்களும் உறவினர்களும் தர மறுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு பின் குழந்தையின் உடலை எடுத்துச் செல்லும் போது குழந்தையின் தாய் தீபா குழந்தையை தரமாட்டேன் என கட்டிப்பிடித்து ஆற தழுவி கண்ணீர் மல்க அழுத சம்பவம் அப்பகுதியில் காண்போரை பெறும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து காவல்துறை பேச்சுவார்த்தைக்கு பின் குழந்தையை பிரேத பரிசோதனைக்கு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர் மின்வெட்டு காரணமாக இரண்டு வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *