Headlines

திருப்பூர் சிறையில் ரகளை, கைதி தற்கொலை முயற்சி : சிறைச்சாலை வளாகத்தில் பரப்பு,

திருப்பூர் சிறையில் ரகளை, கைதி தற்கொலை முயற்சி : சிறைச்சாலை வளாகத்தில் பரப்பு,

திருப்பூரில் 30 கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளி தன் மீது போலீசார் குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்து சிறைச்சாலையில் ரகளையில் ஈடுபட்டார்.மற்றொரு கைதி கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டை அருகே உள்ள தளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் வள்ளி நாயகம் . இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழிப்பறி,கொலை,கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் வள்ளிநாயகம் கடந்த ஒரு வாரத்திற்கு முன் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் இவர் மீது குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை அழைத்து செல்லப்படுவதை அறிந்து வள்ளிநாயகம், அவருடன் சிறைச்சாலையில் இருந்த சக கைதிகளான
பாலசுந்தர்., வெள்ளத்துரை ,
சந்தோஷ்., ஆகிய மூன்று பேருடன் சேர்ந்து சிறைச்சாலையில் சத்தமிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதில் சந்தோஷ் என்ற கைதி கழிவறையை சுத்தம் செய்ய வைக்கப்பட்டிருந்த திரவத்தை குடித்த தால் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தவரை சிறைச்சாலையில் இருந்த போலீசார் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மேலும் ரகளையில் ஈடுபட்ட மற்ற மூன்று கைதிகளையும் போலீசார் தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவம் காரணமாக மாவட்ட சிறைச்சாலை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *