Headlines

நூல் விலை உயர்வால் ஆர்டர்களை இழக்கும் அபாயம் : பருத்தி பதுக்கலை தடுக்க கோரிக்கை

நூல் விலை உயர்வால் ஆர்டர்களை இழக்கும் அபாயம் : பருத்தி பதுக்கலை தடுக்க கோரிக்கை

நூல் விலை உயர்வால் புதிய ஆர்டர்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்,
பருத்தி பதுக்கலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னலாடை நகரமான திருப்பூரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த சார்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

வருடத்திற்கு 75 ஆயிரம் கோடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் திருப்பூர் மாவட்டத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தற்பொழுது வரியில்லா ஒப்பந்தம் மற்றும் பண்டிகை காலங்கள் என ஆர்டர்கள் அதிகரிக்க கூடிய சூழலில் நூல் விலை காரணமாக அனைத்து ஆர்டர்களும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் பின்னலாடை துறையினர் கவலையுடன் தெரிவித்தனர்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்துரத்தினம் கூறுகையில்,
இந்தியாவின் ஜவுளி மாநிலங்களில் முதன்மை மாநிலமாக திருப்பூர் திகழ்கிறது, தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் பனியன், சட்டை, புடவை, சுடிதார் போன்ற அனைத்து ஜவுளி உற்பத்தியும் நடைபெறுகிறது. கடந்த 7 மாதங்களாக பருத்தி விலை ஏற்றதால் நூல் விலை உயர்ந்துள்ளது. தற்பொழுது கிலோவிற்கு 110 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

தற்போது பல்வேறு நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சூழலில் நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தி பெரும் பாதிக்கும் சூழல் உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு என 75,000 ஆயிரம் கோடி வர்த்தகம் ஜவுளித்துறை மூலமாக நடைபெற்று வருவதாகவும், இதை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உள்ளது. ஆனால் தற்பொழுது வரலாறு காணாத அளவிற்கு நூல் விலை ஏற்றம் அடைந்துள்ளது, திட்டமிட்டு சிலரின் சூழ்ச்சியால் இந்த விலை ஏற்றம் உள்ளது என்றும், கடந்த ஆண்டு பருத்தி 350 லட்சம் பேல்கள் நமது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, தற்பொழுது 290 லட்சம் பேல்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பருத்தி பற்றாக்குறை இருந்த போதும், மத்திய அரசு பருத்திக்கான இறக்குமதி வரியை (11 %) சதவீதம் முழுமையாக ரத்து செய்தது.

ரத்து செய்த பிறகும் 62 லட்சம் பேல்கள் பருத்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன, இருந்த போதும் செயற்கையான முறையில் இன்று வரை நூல்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றது, தற்சமயம் வாரத்திற்கு இரண்டு முறை நூல் வேலை உயர்த்தப்படுவதாகவும், இதற்கு முழு காரணம் பருத்தி வர்த்தகர்கள் மற்றும் சில நூற்பாலைகள் பருத்தியை பதுக்கி வைக்கிறார்கள், இதன் காரணமாக செயற்கை முறையில் பருத்தி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி நூல் விலையை அதிகரிக்கிறார்கள். இதன் காரணமாக புதிய ஒப்பந்தங்கள் போட முடியாமல் உள்ளதாகவும், தமிழக அரசு உடனடியாக பருத்தி பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வரும் காலங்கள் பண்டிகை காலமாக உள்ளது, உங்கள் அனைவருக்கும் ஆர்டர்கள் வர உள்ளதால் போர்க்கால அடிப்படையில் இந்த பருத்தி பதுக்கலை தமிழக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *