ஆம்பூரில் துண்டு தோல் உதிரி பாக குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான தோல்கள் எரிந்து நாசமடைந்தன. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிகொல்லை பகுதியில் வசியுல்லா என்பவருக்கு சொந்தமான இடத்தில் அபீப் என்பவர் துண்டு தோல் மற்றும் உதிரி பாகங்களை குடோனில் இருப்பு வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென துண்டு தோல் குடோனில் தீ பற்றி எரிவதை கண்டு அப்பகுதி மக்கள் அபீப்பிற்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் குடோனில் தேக்கி வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான துண்டு தோல்கள் மற்றும் உதிரிபாகங்கள் எரிந்து நாசமானது.
மேலும் இது குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
