Headlines

முதல்வரின் வீட்டுக்கு அருகிலேயே சட்டமன்றம் அமைக்க திட்டமோ? : டிடிவி தினகரன் சந்தேகம்

முதல்வரின் வீட்டுக்கு அருகிலேயே சட்டமன்றம் அமைக்க திட்டமோ? : டிடிவி தினகரன் சந்தேகம்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,
நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை தவெக வுக்கு எதிராக நிறுத்துவது ஏற்கத்தக்கது. அது நல்ல யோசனை. அதனை கூட்டணி கட்சிகளோடு கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும்.

போக்குவரத்து நெரிசலான, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய இடத்தில் புதிய சட்டமன்றத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது ஏற்புடையது அல்ல. தமிழக முதல்வரின் வீட்டுக்கு அருகிலேயே சட்டமன்றம் அமைக்க திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது.

அரிசி பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது.

அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. இரண்டு கட்சிகளும் இணைக்கப்படும் என்பது போன்ற செய்திகளில் உண்மையில்லை. என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *