கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் இரண்டு பேரைக் கொன்ற ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறையினர் 13 இடங்களில் கூண்டுகளை வைத்துள்ளனர்.
20 வது நாளாக புலியை தேடி வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் பாரம் எனும் பகுதியில் புலியைப் பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது கூண்டிலிருந்து எழுந்த உறுமல் சத்தத்தை கேட்டு அப்பகுதி பொதுமக்கள் புலி தான் சிக்கி உள்ளதாக நினைத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரோந்து பணியிலிருந்த வனத்துறையினர் சிறுத்தை கூண்டில் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக கூண்டில் சிக்கிய சிறுத்தையை பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விடுவித்தனர்.
புலிக்கு வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியதால் உருமல் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் புலி சிக்கியதாக நினைத்தனர். ஆனால் சிறுத்தை சிக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
