Headlines

காலி குடங்குகளுடன் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை : திருச்சியில் பரபரப்பு

காலி குடங்குகளுடன் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை : திருச்சியில் பரபரப்பு

முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி, 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன், திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை எனக்கூறி, அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன், வார்டு கவுன்சிலர் முத்துச்செல்வம் தலைமையில், திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆறு மாதங்களாகவே குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படுவதில்லை.

இதனால் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது எனவும், வழங்கப்படும் குடிநீரும் கலங்களாக சேரும் சகதியுமாக வழங்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் தேவைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்ந்து மாநகராட்சி மேயர் அன்பழகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருச்சி மாநகராட்சியை பொருத்தவரை போதுமான குடிநீர் கிடைத்துக் கொண்டிருந்தது.

கோடைகாலம் என்பதால் கொள்ளிடத்தில் உள்ள மூன்று கிணறுகள் நீர்மட்டம் குறைந்துள்ளது.

தற்போது காவிரியில் நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அதன் மூலம் நீர் கொடுக்க வாய்ப்புள்ளது. புதிய போர் போடுவதற்கு ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் என்ன காரணத்திற்காகவோ திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கொள்ளிடத்தில் மட்டும் போர் போடுவதற்கு மாநகராட்சி ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

முக்கொம்பில் திறக்கும் நீர் காவிரி ஆற்றுக்கு தான் வருமே தவிர, கொள்ளிடத்திற்கு சுத்தமாக நீர்வரத்து இருக்காது. கிட்டத்தட்ட ஒரு மூன்று மாதமாக மட்டுமே குடிநீர் பிரச்சினை உள்ளது.

தற்போது எடமலைப்பட்டி புதூர் பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லை என கவுன்சிலர் புகார் அளித்துள்ளார். இது குறித்து ஆணையரிடம் பேசி ஜங்ஷன் பகுதியில் ஒரு சம்ப் அமைத்து டாங்குகளுக்கு தண்ணீர் ஏற்றும் வகையில் ஒரு திட்டம் தயார் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *