Headlines

வாய்ஜாலம் மட்டுமே இந்த ஆட்சியில் இருக்கிறது : முன்னாள் அமைச்சர் உதயகுமார்

வாய்ஜாலம் மட்டுமே இந்த ஆட்சியில் இருக்கிறது : முன்னாள் அமைச்சர் உதயகுமார்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று வெளியே வந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்.

*100 நாள் ஆட்சியை எப்படி பார்க்கிறார்கள்? – என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

படுமோசமான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
வரலாற்றில் வாய்ஜாலம் மட்டுமே இந்த ஆட்சியில் இருக்கிறது. மக்களுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை.

இவர்கள் அறிவித்த எந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 110 விதியின் கீழ் மறைந்த அம்மா அவர்களும் அறிவித்தார்கள் ஆனால் இன்றைக்கு இவர்கள் அறிவித்த அனைத்தும் மாயபிம்பமாக கட்டமைப்பு செய்யப்படுகிறது.

இந்த 118 நாளில் தமிழ்நாடு என்ன நிலைமைக்கு சீரழிந்து போய் உள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
ஒரு அரசு அமைந்தவுடன் இவ்வளவு போராட்டத்தை பார்த்திருக்கிறீர்களா? விவசாயிகள், மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் போராடுகின்றனர். ஒரு மோசமான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. என்றார்.

பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

ஏதோ ஒரு மாயாஜால த்தில் இந்த ஆட்சி வந்துவிட்டது. இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது. என்றார்.

*செயற்குழு பொதுக்குழு குறித்து பேசப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் பேசுவார்களா? இனி வரக்கூடிய எந்த தேர்தலாக இருந்தாலும் அனைவரையும் அரவணைத்து சென்று வெற்றி பெற வேண்டும். ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றுதான் பொதுச் செயலாளர் ஆலோசனை வழங்கினார்.என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *