தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே மினி சரக்கு லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்தனர்.
கரகூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி வேலைக்கு சென்றிருந்தனர்.
நேற்று மாலை வேலை முடித்து மினி சரக்கு லாரியில் பஞ்சப்பள்ளி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பஞ்சப்பள்ளி அடுத்த ஜம்பூத்து முனியப்பன் கோவில் வளைவு பகுதியில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி சரக்கு லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கரகூர் கிராமத்தைச் சேர்ந்த வெண்ணிலா, ரமீலா, மாலா, சிவகாமி, ருக்கு, கல்யாணி, காவேரி, வரலட்சுமி, முனிரத்தினம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
