கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே பதிவு எண்ணுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இயக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.
இது பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் மகேஸ்வரன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தார்.
இதில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்பவரும், அவருடைய நண்பர் சிபி என்பவரும் பிடிபட்டனர்.
நண்பர் அஸ்வினின் மோட்டார் சைக்கிள் நம்பர் பிளேட்டில் உள்ள பதிவை எண்களை சிபி தனது மோட்டார் சைக்கிளில் எழுதி இயக்கி வந்து உள்ளார்.
இதை தொடர்ந்து பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக ரூபாய் 7,200 அபராதம் விதிக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அஸ்வின் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் இல்லாதது உள்ளிட்ட விதி மீறல்களுக்கு ரூபாய் 700 அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து இதுபோன்ற விதிமீறல் வாகனங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை ஆணையர் மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
