Headlines

தவெகவிற்கு காங்கிரஸ் ஒரு யூஸ்& த்ரோ : டிடிவி தினகரன்

தவெகவிற்கு காங்கிரஸ் ஒரு யூஸ்& த்ரோ : டிடிவி தினகரன்

தவெக காங்கிரசை ஒரு யூஸ் அண்ட் த்ரோ போல தான் யூஸ் செய்கிறது, காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூருக்கு திருடனுக்கு தேள் கொட்டியது போல் தற்போது உள்ளது என செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மதுரையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் 23ஆம் புலிகேசி போல பேசுகிறார்கள்.

அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் கூட அடிப்படை நாகரீகம் இல்லாமல் சட்டமன்றத்தில் பேசுகிறார்கள்.

திரைத் துறையிலிருந்து முதலமைச்சர் ஆனவர்கள் எம்ஜிஆர் அம்மா ஜெயலலிதா என்.டி.ஆர் ஆகியோரை எள்ளி நகையாடும் வகையில் உள்ளது.
இதுவரை அவர்கள் அப்படி செயல்பட்டுள்ளார்களா யாராவது அப்படி பேசி இருப்பார்களா?.

ஆனால் தற்போது உள்ளவர்கள் அடிப்படை நாகரீகம் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டப்பேரவை தலைவர் ஜேசிபி பிரபாகர் நடுநிலையாக இருப்பது போல செயல்பட்டுக் கொண்டு பேசுவது எல்லாம் பேசவிட்டு அவை குறிப்பில் இருந்து நீக்குகிறார்.

இன்றைய தலைமுறையினர் அரசியலுக்கு எதிராகவே இருக்கின்றனர்.

திரை கவர்ச்சியில் தான் இன்றைய தலைமுறையினர் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர்.

தமிழை பார்த்து கூட முறையாக பேசத் தெரியாதவர்கள் படிக்க தெரியாதவர்கள் எல்லாம் இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியுள்ளனர்.

முதலமைச்சர் பார்த்து பேசும் போது தப்பு தப்பாக புரிதல் இல்லாம படிக்கிறார்.

எனக்கு வருத்தம் இந்த தற்குறிகளை பார்த்து அல்ல, அவர்களுக்கு வாக்களித்த மக்களை பார்த்து தான்.

இந்த ஆட்சியைப் பார்த்து விமர்சனம் செய்வது எனக்கு அசிங்கமாக உள்ளது.

இன்றைக்கு திமுகவை குறை சொல்கிறோம். அதைவிட இந்த ஆட்சியில் தான் போதை பொருள், சட்ட ஒழுங்கு பிரச்சனை அதிகமாக நடக்கிறது

தமிழ்நாட்டில் இன்று இருக்கும் இளைஞர்கள் தமிழ்நாட்டு அரசியலுக்கு எதிராக மாறிவிட்டார்கள் என குற்றம் சாட்டினார்.

தவெக கட்சிக்கு காங்கிரஸ் ஒரு யூஸ் அண்ட் த்ரோ போல தான் இருக்கிறது மாணிக் தாகூர் வெளியே சொல்ல முடியாமல் திருடனுக்கு தேள் கொட்டியது போல தான் இருக்கிறார்.

நாங்கள் தேசிய ஜனதா கூட்டணியில் தான் இருக்கிறோம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இன்றைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறது. மற்ற கட்சி மாதிரி லாப நோக்கத்தோடு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்படாது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சிக்காரர்களிடம் மறைமுகமாக பேச வேண்டியது கிடையாது. ஏனென்றால் அவர்கள் எங்கள் கூட்டணி கட்சிக்காரர்கள். நாங்கள் நேரடியாகவே பேசுவோம். மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளிடம் நேரடியாக பேசுவோம் அண்ணா திமுகவை கைப்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

ஜென்சி இளைஞர்கள் இன்ஸ்ட்டாவில் இருக்கிறார்கள். தவெக ஆட்சி குறித்து இன்ஸ்டாவில் பார்த்தாலே தெரியும். கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் இன்ஸ்டாவால் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள்.

சட்டமன்றம் என்பது மக்களின் பிரச்சினை பேசும் இடம்.
ஆனால் அங்கு முதலமைச்சர் பேசமாட்டார். நேரம் வரும்போது பேசுவார். உரிய நேரத்தில் பேசுவார், எப்ப தான் பேசுவார்?.

மக்கள் நிழலை பார்த்து வாக்களித்து விட்டார்கள். நிஜத்தில் என்ன நடக்கப்போகிறது என மக்கள் உணர்வார்கள். என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *