பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு துணைமின் நிலையத்தில் கேங் மேன் ஆக கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருபவர், லெப்பைக்குடிகாடு பேரூராட்சி, ஜமாலியா நகரைச் சேர்ந்த அஸ்ரப் (32).
நேற்று இவர் லப்பைகுடிகாடு பேரூராட்சியில், உள்ள வீட்டிற்கு மின்சாரம் வழங்குற்காக மின்மாற்றி மின் இணைப்பை தடுத்து பணியாற்றியபோது மற்றொரு மின்மாற்றி (டிரான்ஸ்ஃபாம்) இருந்து வழங்கப்பட்ட மின்சாரத்தை ரத்து செய்யாததால் பணியின்போது மின்சாரம் தாக்கி பறிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக மங்களமேடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து உயிரிழந்த அஸ்ரப் உடலை பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துமனைக்கு அனுப்பி வைத்து.
மின் விபத்து குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அஸ்ரப் அவரது சொந்த ஊர் பகுதியிலேயே பணியின் போது உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பதினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
