விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பாலப்பாடி–புதுப்பாளையம் சாலையில், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.
மாணவர்கள், பெண்கள் தினமும் செல்லும் இந்த வழியில் மதுக்கடை இருப்பதால் பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

கடையை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பாலப்பாடி, சத்தியமங்கலம், புதுப்பாளையம், புலிப்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் மதுபான கடையை முற்றுகையிட்டனர்.
போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோதும், பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம், அவலூர்பேட்டை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
