Headlines

குன்னூரில் தணிந்த பதட்டம் : வெடிபொருட்கள் செயலிழப்பு

குன்னூரில் தணிந்த பதட்டம் : வெடிபொருட்கள் செயலிழப்பு

வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயழிலப்பு பிரிவு தமிழ்நாடு அதிவிரைவு படை வெடிகுண்டு நிபுணர்கள் மூன்று வெடிப் பொருட்களை பாதுகாப்பாக வெடிக்க செய்ததால் குன்னூர் அருகே பதட்டம் நீங்கியது.

குன்னூர் அருகே பாறைக்கு வெடிவைத்ததில் வெடியில் சிக்கி இரண்டு பேர் காயம் அடைந்த நிலையில்
மேலும் 3-க்கும் மேற்பட்ட வெடி பொருட்கள் பாறைகளில் உள்ளதால் சென்னையிலிருந்து,வெடிகுண்டு நிபுணர்கள் வர வரவழைக்கப்பட்டு,அதனை இன்று அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கிராம மக்கள் வீட்டை விட்டு மதியம் வரை வெளியே வர தடை மற்றும் தேயிலை பறிக்கும் தொழிலாளிகருக்கும் மற்ற வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிராமத்திற்குள் வேறு யாரும் நுழைய தடை விதித்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

நீலகிரி மாவட்டத்தில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கவும் ஜேசிபி எந்திரங்களை இயக்கவும் தடை உத்தரவு உள்ளது.

இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள ஜகதலா பேரூராட்சிக்குட்பட்ட,
பந்துமை கிராமத்தில் உள்ள மைதானத்தை விரிவுபடுத்தி தடுப்பு சுவர் அமைக்க கோத்தகிரி தாசில்தாரிடம் மைதானத்தில் உள்ள பாறைகளை ஆட்கள் மூலம் உடைக்க அனுமதி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பாறைகளை ஆட்கள் மூலம் உடைக்காமல் வெடி வைத்து தகர்க்க முயன்றுள்ளனர். அப்போது எதிர் பாரதவிதமார வெடி வெடித்ததில் குன்னூர் சின்ன வண்டிச்சோலை பகுதியை சேர்ந்த கோபால் மற்றும் காரமடை பகுதியை செல்வராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

குன்னூரில் தணிந்த பதட்டம் : வெடிபொருட்கள் செயலிழப்பு

அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில்,தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஊர் தலைவர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்த இடத்தில் 3 க்கும் மேற்பட்ட வெடி பொருட்கள் பாறைகளில் வைக்கப்பட்டுள்ளதால்,எந்நேரத்தில் வேண்டுமானாலும் வெடிக்க கூடும் என்பதால் சென்னையிலிருந்து,வெடி வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அகற்றப்பட்டது.

மேலும் அந்த கிராமங்களில் தேயிலை பறிக்கவும் மற்ற பணிகளுக்கும் போலீசார் தடை விதித்து கிராம நுழைவாயிலேயே தடுத்து நிறுத்துவதால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *