Headlines

பணம் வைத்து சூதாட்டம் : 8 பேர் கைது, வாகனங்கள் பறிமுதல்

பணம் வைத்து சூதாட்டம் : 8 பேர் கைது, வாகனங்கள் பறிமுதல்

பேரணாம்பட்டில் வீட்டில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து பணம் மற்றும் இருசக்கர வாகனங்கள், செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் பிரபு தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புத்துக்கோவில் அருகே தனி நபருக்கு சொந்தமான வீட்டில் சூதாட்டம் நடைபெறுவதாக வந்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்த பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த முகமது அஸ்ஸலாம், அபீதுல் ரகுமான்,முகமது பாஷா, .பைரோஸ்,அல்தாப், ஹாரிப், கரீம், சாநாவாஸ் ஆகிய 8பேரை கைது செய்து அவர்களிடமிருந்த பதினைந்தாயிரம் ரூபாய் பணம்,எட்டு செல்போன்கள், மற்றும் நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *